Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் திரையில் பார்த்தது போல கிடையாது ‘சில்க்’… சக நடிகை ராதிகா பகிர்ந்த சம்பவம்!

Advertiesment
நாம் திரையில் பார்த்தது போல கிடையாது ‘சில்க்’… சக நடிகை ராதிகா பகிர்ந்த சம்பவம்!
, வியாழன், 14 நவம்பர் 2024 (11:13 IST)
தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை ஒட்டி ஏற்கனவே தி டர்ட்டி பிக்சர் என்ற படம் இந்தியில் உருவாக்கப்பட்டது. இப்போது தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாக உள்ளதாக அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில்க்குடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள ராதிகா அவரைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “சில்க் நாம் திரையில் பார்த்தது போல இல்லை நிஜவாழ்வில். அவர் மிகவும் கண்ணியமானவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் ஒரு ஓரமாக நாற்காலி போட்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்வார். அவரை எல்லாக் கண்களும் மேயும். ஆனால் அவரிடம் சென்று பேசுவதற்கு யாருக்கும் தைரியம் வராது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா காட்டாத தாரளத்தை காட்டிய ஸ்ரீலீலா! ஒரு பாட்டுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?