நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு எதிராக ராதிகா தலைமையில் புதிய அணி?

Webdunia
புதன், 29 மே 2019 (08:32 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே பொறுப்பில் உள்ள நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை எதிரணியில் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. எனவே இம்முறை விஷால் அணியை எதிர்த்து நடிகை ராதிகா களமிறங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் விஷாலின் தலைமை மீது ஒருசில நடிகர், நடிகையர் அதிருப்தியில் இருப்பதால் அந்த அதிருப்தி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து ராதிகா கடும் போட்டியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலைவர் பதவிக்கு ராதிகாவே போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ராதிகாவுக்கு சினிமா துறையில் நல்ல மரியாதை இருப்பதால் அவர் இந்த முறை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments