பாலிவுட்டில் பிரபுதேவா சல்மான் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்தது. இப்படம் நன்றாக இல்லை என சல்மான் கானின் தந்தை விமர்சித்துள்ளார்.
இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மே 13 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்திலும், திரையரங்குகள் திறக்கப்பட்ட இடங்களில் 750 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.
இந்நிலையில் ராதே படம் இப்படத்தைப் பார்க்க ஜீ பிளஸில் சுமார் ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. முதல் நாளன்று இப்படத்தை 42 லட்சம் ஏர் பார்த்துள்ளனர். மேலும், இப்படம் வெளிநாட்டில்; நல்ல வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் தந்தை சலீம் கான் இப்படம் நன்றாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ராதே படத்தில் சல்மானின் கானின் முந்தைய படங்களின் சாயல் அப்பட்டமாக இருந்தது. அதேபோல் ராதே படத்தில் திரைக்கதை நன்றாக இல்லை; இக்கால எழுத்தாளர்கள் இலக்கியங்கள் படிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
இந்தி திரைப்படங்களில் முதல் நட்சத்திர திரைக்கதை எழுத்தாளர் என்ற சாதனை படைத்தவர் சலீம்கான் ஆவார்.