தமிழக அமைச்சர் ஒருவர் அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோலை போட்டு மூடிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி சினிமா மேடைகளிலும் கிண்டலடிக்கப்படுகின்றது.
நேற்று நடந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'இந்த படம் ஆவி குறித்த படம், ஆனால் இந்த ஆவிக்கு தெர்மோகோல் தேவையில்லை' என்று கிண்டலாக பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இதே விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, 'கமல் சமீபகாலமாக அரசியல் பேசி வருகிறார். மற்றவர்களைப்போல் நான் டுவிட்டரில் அரசியல் பேசுபவன் அல்ல, நேரடியாகவே பேசுபவன். சமீபத்தில் அமைச்சர் ஒருவர் தெர்மாகோலை வைத்து ஆற்றை மூடி ஆவி வெளியேறாமல் தடுக்க முயன்றார். அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தெர்மாகோலை அவர்மீது போட்டிருந்தால் அவருடைய ஆவி வெளியேறாமல் இருந்திருக்குமே? என்று கிண்டலாக பேசினார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு கைதட்டல் விண்ணை பிளந்தது.