நடிகர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய வேண்டுமென பிராத்திப்பததாக ராதாரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சற்று முன்னர் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும் ஆனால் அது சரியாகிவிட்டதாகவும் விஜயகாந்த் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியானது . இது தேமுதிகவினர் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் அவர் குணமாக வேண்டி பிராத்தனை செய்யும் வேளையில் அவரின் நீண்டகால நண்பரும் பாஜகவின் முன்னணி பேச்சாளருமான ராதாரவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘எனது நீண்டகால நண்பரான DMDK தலைவர் விஜயகாந்த் COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்ததைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து திரும்பி வர பிரார்த்திக்கிறேன். COVID -19 ல் இருந்து மீண்டு அவர் விரைவில் வீடு திரும்புவார். பொதுமக்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. நாம் இன்னும் தொற்றுநோயை வெல்லவில்லை. ஆகவே, தயவுசெய்து பொறுப்பாக இருங்கள். முகக்கவசத்தை அணிந்து சமூக தூரத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். COVID-19 -திலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.