Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரௌபதி இயக்குனரின அடுத்த படத்தில் இணைந்த ராதாரவி!

Advertiesment
திரௌபதி இயக்குனரின அடுத்த படத்தில் இணைந்த ராதாரவி!
, புதன், 24 பிப்ரவரி 2021 (15:40 IST)
இயக்குனர் மோகன் இயக்கும் புதிய படமான ருத்ர தாண்டவத்தில் நடிகர் ராதாரவி நடிக்க உள்ளார்.

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரில் மீடியா கேமராக்கள், துப்பாக்கி, போதைப்பொருள், ஜெபமாலை போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த படம் தமிழகத்தில் ரகசியமாக செயல்படும் போதை மாஃபியாக்களை பற்றியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டே இந்த படத்திலும் நடிக்கிறார். 2021 மே மாதத்தில் இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கனவே கௌதம் மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் இப்போது முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ராதாரவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மோகன்’ திரைப்படத்தில் நடிகர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 15 ஆம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு… பரபரப்பாகும் படக்குழு!