Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலில் விழுந்தால் தான் சேர்த்துக்கொள்வோம் - ராதாவிக்கு மசியாத சின்மயி!

Advertiesment
Radha ravi
, சனி, 15 பிப்ரவரி 2020 (16:06 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக இருந்து வரும் சின்மயி தனது வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வைரமுத்து மீதான மீடூ விவகாரத்தில் அவர் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு பிரபலமானார். 
 
அதையடுத்து கடந்த சில மாதங்களாகவே ராதா ரவியுடன் தொடர்ந்து பிரச்னைகளில் சிக்கி வருகிறார்.  அந்தவகையில் இன்று யூனியன் தேர்தல்நடைபெற்றது. ஏற்கனவே போட்டியின்றி ராதாரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் , அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சின்மயி யூனியனில் உறுப்பினராக இல்லை என்றுக் கூறி அவரது மனு தள்ளுபடி செய்தனர். அதையடுத்து இன்று  துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பொறுப்புகளுக்கன உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி,   எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை தெரிவித்த சின்மயி மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் சங்கத்தில் சேர்ப்போம். இல்லையென்றால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரித்தார். இதற்கு பதிலளித்த சின்மயி நான் “ யூனியனில் உறுப்பினராவதற்காக 15,000 செலுத்தி சேர்ந்துள்ளேன். அப்படியிருக்க நான் யூனியனில் உறுபிராக இல்லை என சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே  ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது என அழுத்தமாக கூறிவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆலுமா டோலுமா.... லாஸ்லியா போட்ட குத்தாட்டம் - இணயத்தில் செம வைரல்!