Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய படங்கள் பத்தி தப்பா பேசினேனா? – ராஷிக் கண்ணா விளக்கம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (13:52 IST)
தென்னிந்திய படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிதாக வெளியான தகவல் குறித்து நடிகை ராஷிக் கண்ணா விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷிக் கண்ணா. தமிழில் அயோக்யா, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் ராஷிக் கண்ணா சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளியான இணைய தொடரான “ருத்ரா”விலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ராஷிக் கண்ணா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஷிக் கண்ணா ”தென்னிந்திய சினிமாக்கள் குறித்து நான் தவறாக பேசியதாக சில ஜோடிக்கப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிரது. இதை யார் செய்தாலும் உடனே இதை நிறுத்துங்கள். நான் அனைத்து மொழி படங்களையும் மதிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments