Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல்

Advertiesment
இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல்

J.Durai

, சனி, 16 மார்ச் 2024 (08:47 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது.
 
உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI  இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.  
 
போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில்,  காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும்.
 
ஸ்ருதி ஹாசன்  பாடி,  இசையமைத்துள்ள இனிமேல்  பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். 
 
இப்பாடல் தற்போதைய தலைமுறையின்  காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. 
 
எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன்  உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம்  இனிமேல்  பாடல் குறித்து அறிவித்ததிலிருந்தே,  இப்பாடல்  ரசிகர்கள் மத்தியில் பெரும்  ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
 
இதன் பர்ஸ்ட் லுக் பரவலான பாராட்டுக்களைப் பெற்றதுடன் இணையம் முழுக்க பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
 
இந்த சிங்கிள் பாடல் மூலம்  இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள்  இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இனிமேல் பாடலின்  வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தயாரிப்பாளர்கள் மூன்று ஆளுமைகள் இணையும் இப்பாடலைப் பெரிய அளவில் எடுத்துச்செல்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்கு மொழிகளில் 'தி கோட் லைஃப்-ஆடுஜீவிதம்’ படத்தின் டப்பிங் முடித்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பரவசம்