Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எம்.வீரப்பன் புகழை போற்றும"தி கிங் மேக்கர்"பாடல் வெளியீடு!

Advertiesment
ஆர்.எம்.வீரப்பன் புகழை போற்றும

J.Durai

, புதன், 11 செப்டம்பர் 2024 (09:28 IST)
திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் சிறந்த அரசியல் வாதியுமானவர் ஆர்.எம் வீரப்பன்.
 
எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவன தலைவரான ஆர்.எம் வீரப்பன். 1977 முதல் 1996 வரை ஐந்து அரசாங்கங்களில் கேபினட் அமைச்சராகவும்  இரண்டு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்
 
மேலும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து கட்சியை உருவாக்கிய ஆர்.எம் வீரப்பன் அதிமுக சட்டமன்ற பேரவை தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
 
இவர் கடந்த ஏப்ரல் மாதம்    9-ஆம் தேதி வயது-98 (மூப்பின்) காரணமாக மரணம் அடைந்தார்.
 
இவரது  பிறந்த தினமான செப்டம்பர் 9- ஆம் தேதியன்று இவரது புகழை போற்றும் வகையில் அவர் நடத்தி வந்த சத்யா மூவிஸ் சார்பில் 
"தி கிங் மேக்கர்" என்ற தலைப்பில் ஒரு பாடல் வெளியிடப்பட்டது.
 
"ஆர்.எம்.வி.ஐயா என்னும் மாமனித உன்னைப் போல வாழ்வதென்ன எளிதா எளிதா" என்ற  வரிகளில் இந்தப் பாடல் அமைந்துள்ளது  
 
இந்த பாடலானது   கு.கார்த்திக் வரிகளில் கோவிந்த் என்பவர் பாடியுள்ளார். 
 
இதற்கு தரன் குமார் இசை அமைத்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சுப்பராஜுடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி!