Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலாவின் அடுத்த ஹீரோ இவர்தான் ? 22 கிலோ எடை ஏற்றிய ஆர் கே சுரேஷ் !

பாலாவின் அடுத்த ஹீரோ இவர்தான் ? 22 கிலோ எடை ஏற்றிய ஆர் கே சுரேஷ் !
, சனி, 25 ஜனவரி 2020 (13:52 IST)
இயக்குனர் பாலா அடுத்ததாக தயாரிக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஆர் கே சுரேஷ்.

இயக்குனர் பாலா அர்ஜுன் ரெட்டி ரீமேக் விவகாரத்தால் மனதுடைந்துள்ளார். இதனால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்றவேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் ஆர் கே சுரேஷைக் கதாநாயகனாக நடிக்க வைக்க இருக்கிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை 22 கிலோ அதிகமாக்கி முறுக்கேற்றி உள்ளார் ஆர் கே சுரேஷ். மலையாளத்தில் வெளியான ஜோசப் என்ற படத்தை ரீமேக் செய்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலரிங் ஹேர்...ஓபன் உடை....ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு செம ஸ்டைலான மடோனா!