“நாம் கடந்துவந்த வழியை மறக்கக் கூடாது…” நடிகை இந்துஜாவை சாடிய ஆர் கே சுரேஷ்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (16:21 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் நடிகை இந்துஜாவை விமர்சித்துள்ளார்.

ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார். இதனையடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது.

ஆனால் மேயாத மான் படத்துக்கு முன்பாகவே அவர் நடித்த திரைப்படம் பில்லா பாண்டி. சமீபத்தில் இந்துஜா அளித்த ஒரு நேர்காணலில் தான் நடித்ததிலேயே மோசமான படம் பில்லா பாண்டிதான் எனக் கூறியிருந்தார். இது குறித்து பேசியுள்ள பில்லா பாண்டி பட கதாநாயகன் ஆர் கே சுரேஷ் “நான்தான் அவரை எங்கள் நிறுவனத்தின் நான்கு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தேன். நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை மறந்துவிடக் கூடாது. நாம் ஏறிவந்த ஏணியை மறக்கக் கூடாது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெள்ளிக் கிழமை காலேஜ் போங்க… லீவ் நாள்ல வந்து படம் பாருங்க- நடிகர் கவின் பேச்சு!

எனக்கும் அந்த ஆசை துளிர்விட்டுள்ளது… மருதநாயகம் குறித்துக் கமல் பாசிட்டிவ் அப்டேட்!

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments