Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமனிதன் படத்தின் ரிலிஸ் அப்டேட் கொடுத்த ஆர் கே சுரேஷ்… மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி!

மாமனிதன் படத்தின் ரிலிஸ் அப்டேட் கொடுத்த ஆர் கே சுரேஷ்… மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி!
, வியாழன், 17 மார்ச் 2022 (15:04 IST)
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம் மாமனிதன்.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் ரிலிஸாகவில்லை. இது சம்மந்தமாக யுவனுக்கும் சீனு ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் அதனால் சீனு ராமசாமிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிந்து படத்தின் படத்தொகுப்பு பணிகள் நிறைவடைந்து சென்சார் சான்றிதழும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் படம் மே 2022 ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே இவர் விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் உருவான தர்மதுரை படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ மை காட்…. சின்மயியின் புகைப்படத்துக்கு பிரபலத்தின் கமெண்ட்!