Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்னைட், லவ்வர் படங்களின் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் ஆர் ஜே பாலாஜி!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (16:39 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது.

இந்த படத்தில் மணிகண்டன், கண்ணா ரவி மற்றும் ஸ்ரீகௌரி பிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம். இந்த படம் இளைஞர்களை கவர்ந்தாலும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் கவனிக்கத்தக்க தயாரிப்பு நிறுவனமாக அறியப்பட்டுள்ள மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ அடுத்தடுத்து ஐந்து படங்களை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ஒரு படமும் அடக்கம். இந்நிலையில் அதை அறிவித்துள்ள அந்நிறுவனம் படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் , வெற்றிமாறனுடன் மோதும் நடிகர் விக்ரம்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்-ஹரிஷ் கல்யாண்!

’டிமாண்டி காலனி 2’ உள்பட 4 திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்..!

எதிர்க்கட்சி தலைவரை திடீரென சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

சேலையில் ஜொலிக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments