தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்களின் படங்களுக்கு VPF கட்டணத்தில் 50% சலுகை என்று க்யூப் அறிவித்துள்ளது.
க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் VPF கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி தமிழ் திரையுலகில் அவ்வப்போது போராட்டம் நடந்ததும் பட வெளியீடு தாமதமானதும் தெரிந்ததே. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து திறக்கப்படாமல் இருந்ததால் ஓடிடி-யில் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஊரடங்கு தளர்வுகளின் போது 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்களின் படங்களுக்கு VPF கட்டணத்தில் 50% சலுகை என்று க்யூப் அறிவித்துள்ளது. 3 மாதத்துக்கு கட்டணத்தில் சலுகை என நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துடன் க்யூப் ஒப்பந்தம் செய்துள்ளது.