Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமசாமிடா... கபாலிக்கே பிளேடு போட்ட ட்ராபிக் ராமசாமி

ராமசாமிடா... கபாலிக்கே பிளேடு போட்ட ட்ராபிக் ராமசாமி

ராமசாமிடா... கபாலிக்கே பிளேடு போட்ட ட்ராபிக் ராமசாமி
, வெள்ளி, 29 ஜூலை 2016 (11:54 IST)
பார்க்கிறதுக்கு சீனியர் சிட்டிசன், ஆனால் பேனர் வைப்பவர்களுக்கு அவர் டெரர் சிட்டிசன். விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால், அது அதிமுக வைத்த ஜெயலலிதா பேனராக இருந்தாலும் டர்ர்ர்தான்.


 


எத்தனைமுறை லாக்கப்பிற்குள் போனாலும் சிங்கம் கர்ஜிப்பதை மட்டும் விடவில்லை. 
 
இந்தமுறை அவரிடம் மாட்டியது கபாலிக்காக திரவான்மியூரில் வைக்கப்பட்டிருந்த பேனர். ரஜினி ரசிகர்கள் கைகாசை போட்டு வைத்திருந்த அந்த பேனரை எடுத்தால்தான் ஆச்சு என்று வழக்கம்போல் அடம்பிடித்திருக்கிறார் ட்ராபிக் ராமசாமி.

ஜாஸ் வெளியிட்ட படமாச்சே... போலீஸ் பம்மியிருக்கிறது. மூணு நாளில் எடுத்திடறோம் என்றிருக்கிறார்கள் பேனரை வைத்தவர்கள். மூணு மணிநேரம்கூட இருக்கக் கூடாது என்று ராமசாமியே பேனரை கிழிக்க, நல்லவேளையாக போலீஸ் இருந்ததால் ரஜினி ரசிகர்கள் அவரை புரட்டியெடுக்காமல் தப்பித்தார். 
 
ஊரெல்லாம் கபாலிடான்னு சொல்லும்போது, இப்படியும் ஒரு ஆள். நடக்கட்டும்... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரதிராஜாவுடன் கபாலி படம் பார்த்த வைரமுத்து