Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜாவுடன் கபாலி படம் பார்த்த வைரமுத்து

பாரதிராஜாவுடன் கபாலி படம் பார்த்த வைரமுத்து

பாரதிராஜாவுடன் கபாலி படம் பார்த்த வைரமுத்து
, வெள்ளி, 29 ஜூலை 2016 (11:12 IST)
கபாலி வெளியான மூன்றாவது நாளே, கபாலி தோல்வி என்று அறிவித்து, வாங்கிக்கட்டிக் கொண்டார் வைரமுத்து. 


 
 
'கபாலியின் தோல்வியை' என்று ஸ்ட்ராங்காக இருமுறை கூறிவிட்டு டங்க் ஸ்லிப்பாகிவிட்டது என்று அவர் வெளியிட்ட சமரச அறிக்கையை யாரும் நம்பத் தயாராகயில்லை. 
 
போதாததற்கு தயாரிப்பாளர் தாணு, பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காத பொறாமையில் விஷத்தை கக்கியிருக்கிறார் என்று வைரமுத்துவின் அந்தரங்கத்தை அவிழ்த்துவிட்டார். வேட்டியையே உருவினாலும் வீழ்ந்துவிடுகிறவரா கவிப்பேரரசு? 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப்ரீவியூ திரையரங்கில் கபாலி படம் திரையிட்ட போது பாரதிராஜாவுடன், இப்படியெல்லாம் சர்ச்சை நடந்ததற்கான சுவடேயில்லாமல் வாய் நிறைய சிரிப்புடன் கபாலியை பார்த்தார் 
 
வைரமுத்து. இப்போதுதான் அவர் முதல்முறையாக கபாலியை பார்க்கிறாராம். 
 
அப்படியானால், கபாலியின் முதல் காட்சி டிக்கெட்கள் நான்காயிரத்தை வைரமுத்து காசே தராமல் வாங்கிச் சென்றதாக தாணு கூறியிருந்தாரே...அதையெல்லாம் என்ன செய்தாராம் கவிப்பேரரசு?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலாய் மொழியில் இன்று கபாலி ரிலீஸ் - விரைவில் சீனா, ஜப்பான் மொழிகளில்