Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Introducing Pushpa Raj - ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பும் அல்லு அர்ஜூன்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:20 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’ இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே. 

 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கனடா ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 
 
இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகினார். 
 
இந்நிலையில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு Introducing Pushpa Raj என்ற வீடியோ கிளிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments