Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வைல்டு ஃபயர்..! - எப்படி இருக்கிறது புஷ்பா 2 ட்ரெய்லர்?

Advertiesment
Pushpa 2

Prasanth Karthick

, ஞாயிறு, 17 நவம்பர் 2024 (18:58 IST)

அல்லு அர்ஜூன் நடித்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து பெரும் ஹிட் அடித்த படம் புஷ்பா. இதன் இரண்டாவது பாகமான Pushpa 2 The Rule படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

 

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கேஜிஎஃப்பின் பெரும் வெற்றிக்கு பின்னர் புஷ்பா 2வின் திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. அதன் தாக்கம் தற்போது ட்ரெய்லரில் நன்றாகவே தெரிகிறது. ‘புஷ்பா என்றால் பெயர் அல்ல அது ஒரு ப்ராண்ட்’ என ராக்கி பாய் ரக வசனங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதுபோல ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் துறைமுகன், கடல் பகுதி, மலைக்காடுகள் என வெவ்வேறு லொக்கேஷன்களில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
 

 

ட்ரெய்லரின் இறுதியில் ‘புஷ்பான்னா ஃபயர் இல்ல.. வைல்டு ஃபயர்’ என புஷ்பாவின் ஆட்களே கூட்டமாக சொல்வது சற்று அதீதமாக தெரிந்தாலும், படத்தில் பார்க்கும்போதுதான் இந்த பில்டப்புகள் எந்த அளவு பொறுந்தி போகின்றன அல்லது எல்லை மீறுகிறது என தெரிய வரும். ட்ரெய்லராக பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது புஷ்பா 2.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது: ஜோதிகா கொந்தளிப்பு!