Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

vinoth
திங்கள், 17 ஜூன் 2024 (07:43 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுவதால் அந்த தேதியில் படம் ரிலீஸாகாது என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவின. அதனால் அந்த தேதியில் படங்களை ரிலீஸ் செய்ய மற்ற தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். ராம் பொத்தினேனி நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள டபுள் இஸ்மார்ட் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழில் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments