Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லு அர்ஜூனுடன் மோத தயாராகிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ‘ரகு தாத்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அல்லு அர்ஜூனுடன் மோத தயாராகிவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ‘ரகு தாத்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Mahendran

, வெள்ளி, 31 மே 2024 (15:16 IST)
அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படமான 'புஷ்பா 2’ என்ற படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அல்லு அர்ஜுன் நடித்த  'புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த தேதியில் தங்கள் படத்தை வெளியிட பல முன்னணி நடிகர்களே தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் கூட  'புஷ்பா 2’ படத்திற்கு முன்பும் பின்பும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் ஆனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள். ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது! என பதிவு செய்துள்ளார்.
 
கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய்,  உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில், சீன் ரோல்டான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கீர்த்திக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு திடீரென சென்ற ’கோட்’ படக்குழு.. விஜய்யும் சென்றாரா?