Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊ சொல்றியா மாமா வெர்ஷன் 2.0.. புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் ரிலீஸ் அப்டேட்!

vinoth
வெள்ளி, 22 நவம்பர் 2024 (09:56 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ரீ லீலா மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடனமாடியுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ சொறியா மாமா பாடலைப் போல இந்த பாடல் இருக்கும் என இப்போதே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments