பூரி ஜெகன்னாத்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படம்… டைட்டில் & டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:47 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத்.  அவரின் பல ஹிட் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவை வைத்து அவர் இயக்கிய லைகர் படம் படுமோசமான தோல்வி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார்.  இந்த படத்தில் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.  பூரி ஜெகன்னாத்துடன் நடிகை ஷார்மி இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த படத்துக்கு டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி பூரி ஜெகன்னாத்தின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக டீசரைப் படக்குழு வெளியிடவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments