Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'' காந்தாரா'' படத்தின் நடிக்க விரும்பிய புனீத் ராஜ்குமார்- இயக்குனர் தகவல்

Advertiesment
kantara
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (16:44 IST)
காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி,’’ புனீத் ராஜ்குமார் காந்தாரரா படத்தில் நடிக்க விரும்பினார் என்று புதிய தகவல் தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப்-1 ,2 ஆகிய படங்களுக்குப் பின் கன்னட சினிமாவின் மீது சினிமா ரசிகர்கள் பார்வை குவிந்துள்ளது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் காந்தாரா.

இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.  இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் மறைந்த புனீத் ராஜ்குமார், கடந்தாண்டு மாரடைப்பால் காலமானார்.  சமீபத்தில், கர்நாடக அரசு அவருக்கு  கர் நாடகக ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார ரஜினி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில்,  பலரும் புனீத் ராஜ்குமாருடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி,’’ புனீத் ராகஜ்குமார் காந்தாரரா படத்தில் நடிக்க விரும்பினார், என்றும், இதையை தயார் செய்து வைத்த போதிலும் அவர் பிஸியாக இருந்ததால், என்னை நடிக்கும்படி கூறினார்.

புனித் ராஜ்குமார் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற விரும்பத்தில்தால் அவரிடம் கதையைக் கூறினேன். அதன்படியே இயக்கி நடித்திருந்தேன்’’ என்று    நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கதை திருட்டு சர்ச்சை: அட்லி மீது புகார்