Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புராஜக்ட் கே'' பட பிரபாஸ் போஸ்டர் காபி... நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (19:43 IST)
மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், புராஜக்ட் கே படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள  நிலையில், நடிகர் பிரபாஸ் இப்படத்தின் ஷூட்டிற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இன்று இப்படத்தைத் தயாரித்து வரும் வைஜெயந்தி நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’எல்லா நல்லவைகளும்  நடக்க நேரம் எடுத்துக் கொள்ளும்’’ என்று பதிவிட்டிருந்தது. அதன்படி, இன்று புராஜக்ட் கே படத்தின் ஹீரோ பிரபாஸின் புதிய போஸ்டரை அப்லோடு செய்ய தாமதமானதாக தெரிகிறது.

நேற்று, புராஜக்ட் கே பட ஹீ ரோயின் நடிகை தீபிகா படுகோனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த நிலையில், இன்று பிரபாஸின் போஸ்டரை ரிலீஸ் செய்தனர்.

பிரபாஸின் புதிய போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி நடிப்பில் வெளியான அயர்ன் மேன் என்ற படத்தின் அவர் கொடுத்துள்ள அதே போஸை அப்படியே பிரபாஸுக்குக் கொடுத்து, படத்தை போட்டோ ஷாப்பில் பட்டி, டிங்கரில் செய்து, இப்போஸ்டர் உருவாக்கியுள்ளர். இது அட்ட காப்பி என்று  நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறனும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ஆஹா எக்சலென்ட் டிசைன், கிரியேடிவ் டீம் கங்குராட்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், வலைபேச்சு பிஸ்மி,  வாங்க ஆதிபுரூஸ்  பார்ட் 2 என்று விமர்சித்துள்ளார்.. இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்த வீடியோ இவ்விமர்சனத்திற்கு பதில் கூறுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments