Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக் கான் படத்தின் தயாரிப்பாளரின் மகளுக்குக் கொரோனா – தனிமையில் குடும்பம்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (07:43 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த படங்களைத் தயாரித்த கரீம் மொரானியின் மகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா சாதாரண மக்கள், பிரபலங்கல் என எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரையும் பாதித்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு இந்த தொற்று இருந்து சிகிச்சைப் பெற்று குணமாகியுள்ளார். இந்நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலக் குடும்பம் இப்போது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஷாருக் கான் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கரீம் மொரானி. இவரின்  மகள் ஷாசா மொரானி சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று வந்தார். முதலில் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் தற்போது அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து ஷாசா மொரானி தற்போது, மும்பை நானாவதி மருத்துவமனையில் ஷாஜியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கரீம் மொரானியின் குடும்பத்தார் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments