நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் பட தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கம் அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தின் டீசர் விடீயோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கான விளம்பரம் கடந்த 14ம் தேதி நாளிதழில் முழுப்பக்க அளவில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், நாளிதழில் விளம்பரம் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்கம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதாவது, எந்த படத்தின் விளம்பரமும் நாளிதழ்களில் முழுப்பக்கம் கொடுக்கக்கூடாது. கால் பக்கத்திற்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
எனவே, இந்த விதியை மீறிய காரணத்திற்காக, வேலைக்காரன் படத் தயாரிப்பாளர் 24 ஏம் ஸ்டூடியோஸ் மற்றும் விஜய் தொலைக்காட்சி ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரூ.1.கோடி அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருக்கிறார். சிவகார்த்திகேயன் மீதுள்ள கோபமே இதற்கு காரணம் சமூகவலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.