Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவரது பிறந்த நாளை கொண்டாடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!

Advertiesment
தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவரது பிறந்த நாளை கொண்டாடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!

J.Durai

, புதன், 9 அக்டோபர் 2024 (08:14 IST)
டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்  சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டு டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளரும் நடிகருமான  விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்னுவிஷால், ஆர்யா,  இயக்குநர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, மாரிசெல்வராஜ், விக்னேஷ் சிவன், ஏ.எல்.விஜய்,  நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா மற்றும்  பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
அப்போது பேசிய  ஐசரி கணேஷ்.....
 
உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி.  
இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இந்த சமூகத்திற்கு நான் இன்னும் அதிக நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குக் கொடுக்கிறது. அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி எனக் கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம்,மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்!