Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் ரி ரிலீஸ் திட்டம்… தயாரிப்பாளர் அறிவிப்பு!

vinoth
வியாழன், 29 மே 2025 (08:21 IST)
கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன.  இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து போக்கிரி, பகவதி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டு அவரின் சச்சின் திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகி 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அடுத்தடுத்து அவரின் பழைய படங்கள் ரிரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் சினிமாக் கேரியரில் சூப்பர்ஹிட் படங்களாக அமைந்த ‘சிவகாசி’ மற்றும் ‘குஷி’ ஆகிய படங்களை அடுத்தடுத்து ரி ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

ஒரு தடவ அப்படி சொல்லி மாட்டிகிட்டேன்… இனிமே நடக்காது –லோகேஷ் பதில்!

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments