ஒரு டஜன் குழந்தைகள் வேண்டும் என்று கணவரிடம் கேட்கப்போகிறேன் – பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

ஒரு டஜன் குழந்தைகள் வேண்டும் என்று கணவரிடம் கேட்கப்போகிறேன் – பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!

Advertiesment
ஒரு டஜன் குழந்தைகள் வேண்டும் என்று கணவரிடம் கேட்கப்போகிறேன் – பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:44 IST)
நடிகை பிரியங்கா சோப்ராவிடம் குழந்தைகள் பற்றி கேட்டதற்கு ஓபனாக ஒரு பதிலைக் கூறியுள்ளார்.

இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் நுழைந்த அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து 38 வயதாகும் பிரியங்கா சோப்ரா அவரை விட 10 வயது சிறியவரான பாப் பாடகர் நிக் ஜோன்ஸை மணந்துகொண்டார். இப்போது லண்டனில் வசிக்கும் பிரியங்கா அங்கேயே சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கும் கணவருக்கும் இடையே வயது வித்தியாசம் குடும்ப வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ‘என் கணவர் தண்ணீருக்குள் இருக்கும் மீன் போல. இந்திய கலாச்சாரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து பேசியுள்ள பிரியங்கா சோப்ரா ‘என் கணவரிடம் ஒரு டஜன் குழந்தைகள் வேண்டும் என்று அடம்பிடிக்க போகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து பீரியட் படங்களில் நடிக்கும் சசிக்குமார்!