Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விஷால் 34’ படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’விஷால் 34’ படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
, திங்கள், 17 ஜூலை 2023 (11:40 IST)
விஷால் நடிக்க இருக்கும் 34ஆவது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீசியன்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதற்குள் தொடங்கியதா விஜய் 68 படத்தின் வியாபாரம்?