பிரசாந்துக்கு ஜோடியான பிரியா ஆனந்த்! இணையத்தில் வெளியான புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (10:53 IST)
அந்தாதூன் தமிழ் ரீமேக்கான அந்தகனில் கதாநாயகியாக பிரியா ஆனந்த ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் தியாகராஜனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் விலகவே, தியாகராஜனே இப்போது படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் கார்த்திக், கே எஸ் ரவிக்குமார் மற்றும் சிம்ரன் ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இப்போது கதாநாயகியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கதாபாத்திரத்தை இந்தியில் ராதிகா ஆப்தே செய்திருந்தார். பிரியா ஆனந்த் மற்றும் பிரசாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments