தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இதையடுத்து தொடர்ந்து  தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வரவைத்துள்ளார். 
 
									
										
			        							
								
																	
	 
	ஆம், சிம்பிள் மர்டர் என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் நெக்லெஸ் , கம்மல் என உடல் முழுக்க 2000 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்துக்கொண்டு பாத் உடையோடு சோஃபாவில் படுத்துக்கொண்டு வித்யாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.