Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிகையாளர்கள் சிரிக்கவே மாட்டீங்களா? ரோபோசங்கர் பேச்சுக்கு கடும் கண்டனம்

Advertiesment
பத்திரிகையாளர்கள் சிரிக்கவே மாட்டீங்களா? ரோபோசங்கர் பேச்சுக்கு கடும் கண்டனம்
, செவ்வாய், 14 மே 2019 (07:55 IST)
பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சியின்போது படம் பார்க்கும் பத்திரிகையாளர்கள் நல்ல நகைச்சுவை காட்சிகளுக்கு கூட சிரிக்காமல் உள்ளதாக ரோபோ சங்கர் கூறியதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததை அடுத்து பத்திரிகையாளரிடம் அவர் வருத்தம் தெரிவித்தார்.
 
நேற்று சென்னையில் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் பேசிய ரோபோசங்கர், 'நான் பத்திரிகையாளர் காட்சிக்கு எப்போதுமே போக மாட்டேன். ஏனெனில் பத்திரிகையாளர்கள் படம் பார்க்கும்போது நல்ல நகைச்சுவை காட்சிக்கு கூட சிரிக்க மாட்டார்கள், கைதட்ட மாட்டார்கள் என்று பேசினார்
 
ரோபோ சங்கரின் இந்த பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தாங்கள் எதையும் மனதுக்குள் ரசிப்பவர்கள் என்றும், உணர்ச்சிகளை வெளியே காண்பிக்க மாட்டோம் என்றும் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து தான் பேசிய இந்த கருத்துக்கு வருந்துவதாகவும், தெரியாமல் தான் பேசியதாகவும், தன்னை ஒரு குழந்தை போல் நினைத்து பத்திரிகையாளர்கள் மன்னிக்க வேண்டும் என்றும் பேசி ரோபோ சங்கர் சமாளித்தார். இதனால் 'மிஸ்டர் லோக்கல்' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பாலின் "ஆடை" டீசர் அப்டேட்!