Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவின் சாபக்கேடு நெகட்டிவ் விமர்சனங்கள்தான்.. இயக்குனர் பிரேம்குமார் வேதனை!

vinoth
சனி, 12 ஜூலை 2025 (10:52 IST)
96  என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.

இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம்குமார் 96 படத்தின் திரைக்கதையை தான் இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதியதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தமிழ் சினிமாவுக்கு இப்போது மிகப்பெரிய சாபக்கேடு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் எனப் பேசியுள்ளார். மேலும் காசுபெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்துவிட்டதாகவும், திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறை விமர்சனங்கள் படங்களை அதிகமாகப் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments