Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (22:35 IST)
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு நட்சத்திர கூட்டமே உள்ளது. விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஸ்ரீமான், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, ரம்யா, பிரகிதா, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகர் பிரேம்குமார் இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இணைந்தது குறித்து நடிகர் பிரேம்குமார் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
தளபதி 64’ படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் தளபதியுடன் இரண்டாவது முறையாக இணைவதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
தற்போது ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதற்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டிலும் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஜனவரிக்குள் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments