Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வயது வித்தியாசத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகும் பிரேம்ஜி அமரன்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:22 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜி சில வருடங்களுக்கு முன்னர் தனது காதலி என பாடகி வினைதா என்பவரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க பின்னர் தான் விளையாட்டுக்கு அப்படி சொன்னதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றினார்.

இந்த நிலையில், 43 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு கடந்தாண்டு திருமாணமாகும் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியிருந்த நிலையில், இந்த புத்தாண்டில் பிரேம்ஜி அமரன் தன் சமூக வலைதள பக்கத்தில், இவ்வருடம்  கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் விரைவில் மணமகளை அறிவிப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணுக்கு அவரை விட 20 வயது குறைவு எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்!!

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்!!

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

இந்த ஆபாச சீனை மாத்துங்க? அந்த வார்த்தையை சென்சார் பண்ணுங்க!? – இந்தியன் 2வில் எக்கச்சக்க கரெக்சன்ஸ் சொன்ன சென்சார் போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments