Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

எப்படி இருந்த ஆளு இப்படி ஆயிட்டாரே… பிரேம்ஜி மனைவி பகிர்ந்த ரீல்ஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்!

Advertiesment
Marriage

vinoth

, திங்கள், 8 ஜூலை 2024 (14:04 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்கப்பட்டது.  இதையடுத்து அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருத்தணி கோயிலில் இந்து என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

இதுநாள் வரை முரட்டு சிங்கிளாக ஜாலியாக சுற்றிவந்த பிரேம்ஜி, தற்போது கல்யாணம் ஆகி குடும்பஸ்தனான ஆன பிறகு வீட்டு வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். அது சம்மந்தமான வீடியோக்காட்சிகளை இணைத்து பிரேம்ஜியின் மனைவி இந்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!