பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் போட்டிகளில் கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வாங்கி நடத்தி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத போதும் தீரமுடன் சீசன்களில் நின்று அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான கல் ஹோ நோ ஹோ என்ற படம் தற்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் க்ளைமேக்ஸில் ஹீரோ ஷாருக் கான் ஒரு விபத்தில் இறப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும்.
அந்த க்ளைமேக்ஸ் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ப்ரீத்தி ஜிந்தா “அந்த க்ளைமேக்ஸ் காட்சியை இப்போது பார்த்தாலும் நான் அழுகிறேன். அதை படமாக்கும் போதும் நான் அழுதேன். என்னுடைய முதல் காதல் ஒரு கார் விபத்தால் முடிவுக்கு வந்தது” எனக் கூறியுள்ளார்.