Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் படத்தை சூழ்ச்சி செய்து பிடுங்கினார் முருகதாஸ் - கொதித்தெழுந்த இயக்குனர்

அஜித் படத்தை சூழ்ச்சி செய்து பிடுங்கினார் முருகதாஸ் - கொதித்தெழுந்த இயக்குனர்
, வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:34 IST)
தேசிய விருது அளிக்கும் கமிட்டியில் உள்ள இயக்குனர் பிரியதர்ஷனை குறை கூறிய இயக்குனர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குனர் பிரவீன்காந்த் கூறியுள்ளார்.


 

 
கடந்த வருடத்திற்கான தேசிய விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. ஆனால், அதில் பாரபட்சம் காட்டப்படுவதாக இயக்குனர் முருகதாஸ் தெரிவித்த கருத்து சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பிரியதர்ஷனின் உதவியாளரும், ஜோடி, ரட்சகன் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன்காந்த் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
என்னிடம் ரட்சகன் படத்தில் உதவியாளராக சேர்ந்தவர்தான் முருகதாஸ். எனது மற்றொரு உதவியாளர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியுடன், அஜீத்திற்கு கதை சொல்லி, நான் இயக்க வேண்டிய படத்தை தட்டி பறித்தீர்கள். என்னுடைய உதவியாளர்தானே இயக்குகிறார் என நானும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தேன். அது எனக்கு எனது குருநாதர் பிரியதர்ஷன் சொல்லிக் கொடுத்தது. அதேபோல், தினா படத்தில் அஜீத்திற்கு ‘தல’ எனற பட்டம் கொடுத்தீர்கள். அது என்னுடைய மற்றொரு உதவியாளர் மோகன் கூறிய விஷயம். ஆனால், இன்றுவரை நீங்கள்தான் அந்த பெயரை வைத்ததாக கூறப்பட்டு வருகிறது. நீங்கள் இயக்கிய ரமணா, கஜினி, கத்தி ஆகிய படங்களின் கதை யாருடையது என எல்லோருக்கும் தெரியும்.
 
இப்படிப்பட்ட உங்களுக்கு பிரியதர்ஷனை குறை கூற எந்த தகுதியும் கிடையாது. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என கோபமாக பேசியிருக்கிறார் பிரவீன்காந்த்.
தமிழ் சினிமா உலகினரிடையே இந்த ஆடியோ வாட்ஸ் மூலம் வைரலாக பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஷத்தை விட்டுவிடாத நடிகர்