போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

vinoth
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:05 IST)
பிக்பாஸின் 9வது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் உரையாடல்களும், 18+ சமாச்சாரங்களும் விரசமாக அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில்  முதல் வார எலிமினேஷன் இருக்காது என்று நினைத்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியுள்ளார் ப்ரவீன் காந்தி.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது தொகுப்பாளர் விஜய் சேதுபதி அவரை நக்கலாகப் பேசி சீண்டி வெளியேற்றினார். பதிலுக்கு பிரவீன் காந்தியும் ஏதேதோ பேச முயன்றும் அவரால் விஜய் சேதுபதியைப் பேசி வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் வெளியில் வந்துள்ள பிரவீன் காந்தி விஜய் சேதுபதிப் போட்டியாளர்களைப் பேசவே விடுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது சம்மந்தமாக “விஜய் சேதுபதி சினிமாவில் எனக்கு ஜூனியர். ஆனால் பிக்பாஸில் அவர் எனக்கு சீனியர். அதனால் அவரை எதிர்த்து பேசமுடியவில்லை. ஆனால் விஜய் சேதுபதி அவர்களே,போட்டியாளர்களைப் பேச விடுங்கள். கமல் சார் அதை செய்வார். எப்போதுமே போட்டியாளர்களை மூக்கை உடையும் விதமாகவே பேசவேண்டும் என்ற முடிவோடு வராதீர்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரவீன் காந்தியின் இந்தக் கருத்து உண்மைதான் என்று அவருக்கு ஆதரவும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments