சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

vinoth
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (08:54 IST)
இந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் பேன் இந்தியா என்ற வகைமையை முதல் முதலில் உருவாக்கியதே ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம்தான். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு பாகங்களும் சேர்ந்து 3 மணி நேரம் 44 நிமிடம் ஓடுமளவுக்கு பாகுபலி மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments