ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

vinoth
சனி, 18 அக்டோபர் 2025 (15:17 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் தள்ளிப் போகவாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளி ரேஸில் முந்தியது யார்? டியூட், பைசன், டீசல் முதல் நாள் வசூல் விவரங்கள்..!

சமந்தா, தமன்னா பெயரில் போலி வாக்காளர் பட்டியல்: ஹைதராபாத்தில் பரபரப்பு - காவல்துறை வழக்குப்பதிவு

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments