Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

Siva
செவ்வாய், 21 மே 2024 (13:47 IST)
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான் என்றும் 2019 ஆம் ஆண்டு கிடைத்த தொகுதிகளை விட அதிக தொகுதிகள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மீண்டும் 400 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமராக மோடி மீண்டும் மோடி பதவி ஏற்பார் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மத்தியில் தேர்தலுக்குப் பிறகு அமையப்போவது மோடி ஆட்சி தான் என்றும் 2019 ஆம் ஆண்டு பெற்ற இடங்களை விட சற்று அதிகமாகவே பாஜக மற்றும் அதன் கூட்டணி நிச்சயம் பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியை வீழ்த்த போதுமான நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி எடுக்கவில்லை என்றும் அதனால் இந்தியா கூட்டணியின் முயற்சியின் இம்முறை தோல்வி அடையும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துறவறம் பூண்டார் பிரபல நடிகை.. கும்பமேளா விழாவில் அறிவிப்பு..!

ஏன் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை… சமந்தா சொன்ன பதில்!

எனக்கு ஓப்பன்ஹெய்மர் படம் பிடிக்கவில்லை… நடிகர் மாதவன் சொன்ன காரணம்!

சூர்யா மேல் வருத்தமோ கோபமோ இல்லை… கௌதம் மேனன் பதில்!

விஜய் அரசியல் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. நடிகர் பார்த்திபன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments