ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன் என பிரதமர் மோடி தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என கூறிய பிரதமர் மோடி சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது - எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என்பதும் துணை அதிபர் இன்று ஈரான் அதிபராக பதவி ஏற்க இருப்பதாகவும் செய்திகளானது.
இந்த நிலையில் ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலை மோதி விபத்துக்குள்ளானதாகவும் மீட்பு படைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.