Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் ட்வீட்டுக்கு பதில் சொன்ன பிரதமர்! குறுக்கே புகுந்த பிரகாஷ் ராஜ்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (13:58 IST)
சமீபத்தில் காசிக்கு சென்ற விஷால் பிரதமர் மோடியை வாழ்த்தி பதிவிட்டதற்கு பிரகாஷ்ராஜ் அளித்துள்ள கமெண்டரியும், பிரதமர் மோடியின் பதிலும் வைரலாகியுள்ளது.

பிரபல தமிழ் நடிகரான விஷால் சமீபத்தில் காசிக்கு தனது நண்பர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் விஷால் “அன்பான பிரதமர் மோடிஜி, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றேன் மற்றும் கங்கையின் புனித நீரையும் தொட்டேன். கோவிலை புதுப்பித்து சிறப்பாக மாற்றியுள்ளதுடன், அனைவரும் வரும் வகையில் அனைத்தையும் எளிதாக்கியுள்ளீர்கள். அதற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பிரதமர் மோடி “காசியில் நீங்கள் அற்புதமான அனுபவங்களை பெற்றதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். விஷாலின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள நடிகரும் அரசியல் செயல்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் “ஷாட் ஓகே.. அடுத்து?” என்று கிண்டலாக கேட்டுள்ளார். இந்த ட்வீட்களுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த விஷால் - அஞ்சலி: இன்னொரு நாயகி யார்?

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

அடுத்த கட்டுரையில்
Show comments