மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக வின் கொள்கைகளைப் பற்றியும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் தொடர் விமர்சனம் செய்து வருகிறார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஆகியவற்றைப் பற்றியும் சாடி வந்தார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் குறித்தும் மோடியை வருத்தெடுத்தார் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி லிங்காயத்துக்களை தனி மதமாக பிரித்தது, அதற்கு பாஜகவினர் மக்களை மதத்தால் பிரிக்கிறது காங்கிரஸ் கட்சி என்று குற்றம் சாட்டியது.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“மக்களை மத ரீதியாக பிரிப்பதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கு கசந்துவிட்டதா? என்று கூறியுள்ளார்.