பிக்பாஸ் சீசன் 9-ல் வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் நுழைந்துவிட்ட நிலையில் ஒருவழியாக சீக்ரெட் டாஸ்க் விஷயத்தை கையில் எடுத்துள்ளார் பிக்பாஸ்.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலுமே யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுப்பார். அந்த சீக்ரெட் டாஸ்க்கை அவர்கள் வெற்றிகரமாக செய்தால் அவர்களுக்கு சிறப்பு சலுகை ஏதாவது கிடைக்கும். அப்படியாக இந்த சீசனில் முதலாவதாக சாண்ட்ராவை பிடித்து சீக்ரெட் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.
தற்போது ஆஹா ஓஹோ ஹோட்டல் டாஸ்க் நடந்து வரும் நிலையில், அதில் ஒரு ஊழியரை ட்ரிகர் செய்து அவரை வேலையை விட்டு நீக்க வைக்க வேண்டும், அல்லது பணி மாற்றம் செய்ய வேண்டும், இதை செயல்படுத்த யாராவது ஒருவருடன் திட்டமிட்டுக் கொள்ளலாம். மற்றபடி இந்த விஷயம் யாருக்குமே தெரியக் கூடாது என பிக்பாஸ் ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளார்.
அப்படி சொன்னதுமே சாண்ட்ரா தனது கணவர் ப்ரஜீனின் உதவியை நாடியுள்ளார். இந்த ஜோடி சேர்ந்து யாரை டார்கெட் செய்து வெளியேற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வீட்டில் உள்ள பலருக்கும் விஜே பாரு மேல் அதிருப்தி உள்ளதால் அவரை ஈஸியாக வேலை நீக்கம் செய்ய முடியும் என அவர்கள் திட்டமிட்டால் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்.
Edit by Prasanth.K