தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ப்ரதீப்பின் ‘LIK’… அப்போ ட்யூட்?

vinoth
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (08:04 IST)
தற்போது ப்ரதீப் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘ட்யூட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படங்களில் LIK செப்டம்பர் மாதத்திலும் ட்யூட் தீபாவளிக்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் LIK திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது மாற்றப்பட்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ட்யூட் திரைப்படத்தின் ரிலீஸ் வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே பைசன் திரைப்படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LIK படத்தில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லலித்குமார் தயாரிக்கிறார் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். எதிர்கால காதல் பேண்டசி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரான்ஸின் உயரிய 'செவாலியர்' விருது: தமிழ் திரையுலக பிரபலத்திற்கு அறிவிப்பு!

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments