பிரதீப்பின் அடுத்த படத்தில் பிரியங்கா மோகன் & ஏ ஆர் ரஹ்மான்? செம்ம காம்பினேஷா இருக்கே!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (08:48 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். அடுத்து தன் இயக்கத்தில் தானே ஒரு படத்திலும் நடிக்கவும் உள்ளார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது பிரதீப், ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் மிதுன் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments